உக்ரைன் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் அதனால் நீங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை,” என, நெதர்லாந்து துாதரிடம், ஐ.நா.,வுக்கான இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்தி அமைதிப் பேச்சில் ஈடுபட வேண்டும் என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவை எதிர்த்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா., பொதுச் சபையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது.
”அவ்வாறு நடுநிலை வகிக்காமல், ஐ.நா., சட்டத்திற்கு மதிப்பளித்து ஓட்டு போட்டிருக்க வேண்டும்,” என, பிரிட்டனுக்கான நெதர்லாந்து துாதர் கரல் வான் ஊஸ்டெரம், ஐ.நாவிற்கான இந்திய துாதர் திருமூர்த்திக்கு ‘டுவிட்டரில்’ தெரிவித்துள்ளார்.இதற்கு திருமூர்த்தி காட்டமாக, ”எங்களை ஆதரிப்பது போல பேச வேண்டாம். உக்ரைன் விவகார