கனடாவில் சுமார் 1.7 மில்லியன் பறவைகள் வைரஸ் காய்ச்சல் காரணமாக கொல்லப்பட்டுள்ளன.
கோழிகள் உள்ளிட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளே கூடுதல் எண்ணிக்கையில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளன.
எவியன் இன்புளுன்சா என்னும் நோயினால் இந்த பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அல்பர்ட்டா மாகாணத்தில் மட்டும் சுமார் ஒன்பது லட்சம் பண்ணைப் பறவைகள் கொல்லப்பட்டுள்ளன.
சுமார் 23 பண்ணைகளில் வளர்க்கப்பட்ட பறவைகள் இவ்வாறு இன்புளுன்சா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளன.
இந்தக் காய்ச்சல் வைரஸ் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த பறவைகளை பண்ணைகளுக்கு உள்ளேய வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.