Home உலகம் இங்கிலாந்தில் 13 ஆண்டுகள் காணாத வட்டி விகித உயர்வு

இங்கிலாந்தில் 13 ஆண்டுகள் காணாத வட்டி விகித உயர்வு

by Jey

இங்கிலாந்து வங்கி (BOE) உயர்ந்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் முயற்சியில், 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

மில்லியன் கணக்கான பிரித்தானிய குடும்பங்கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளுடன் போராடும் நேரத்தில், BOE-இன் கொள்கை வகுப்பாளர்கள் டிசம்பரில் இருந்து நான்காவது தொடர்ச்சியான கட்டண உயர்விற்கு வாக்களித்தனர்.

வங்கியின் நாணயக்கொள்கைக் குழு, 25-அடிப்படை புள்ளிகளை பெரும்பான்மையாக 6-3 ஆக அதிகரிக்க ஒப்புதல் அளித்ததுடன், அடிப்படை வட்டி விகிதத்தை 1% வரை உயர்த்தியது.

எனினும், சிறியளவிலான உறுப்பினர்கள் வட்டி விகிதங்களை 0.5 சதவீத புள்ளிகளால் 1.25% ஆக அதிகரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல மத்திய வங்கிகளைப் போலவே, உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள போர் காரணமாக அதிகரித்துள்ள பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை வழிநடத்தும் செயற்பாடுகளை BOE முன்னெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கொரோனாவால் சீனா முடக்கப்பட்டமை உள்ளிட்ட காரணங்களின் விளைவாக இங்கிலாந்தின் பணவீக்கம் இந்த ஆண்டு தோராயமாக 10% உயரும் என்று வங்கி எதிர்பார்க்கிறது.

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை ஆழமாக்கி, பலரின் வருமானத்தை விட விலைகள் வேகமாக உயரக்கூடும் என்றும் வங்கி எச்சரித்துள்ளது.

related posts