கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அவசரமாக உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளார்.
முன் அறிவித்தல் எதுவுமின்றி ட்ரூடோ திடீரென இன்றைய தினம் உக்ரைன் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
உக்ரைன் மக்களுக்கு கனடாவின் பூரண ஆதரவினை தெரிவிக்கும் நோக்கில் பிரதமர் இந்த விஜயத்தை ம்ம்றகொண்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ட்ரூடோ கியூ நகரத்தினை அண்டிய புறநகர்ப் பகுதிகளுக்கும் விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர், உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கீயுடன் சந்திப்பு நடாத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.