உக்ரைனுக்கு மேலும் இராணுவ உதவிகள் வழங்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உறுதிமொழி வழங்கியுள்ளார்.
கனேடிய பிரதமர் உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஸெலென்ஸ்கீயுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்ரோன்களை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கனேடிய அரசாங்கம் மேலும் 50 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கும் என அறிவித்துள்ளார்.
40 ரஸ்ய பிரஜைகளுக்கும் ஐந்து நிறுவனங்களுக்கும் எதிராக தடைகளை விதிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.