Home இலங்கை இலங்கை முழுவதும் ஊரடங்கு

இலங்கை முழுவதும் ஊரடங்கு

by Jey

கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி நிலையினை அடுத்து அண்மைய நாட்களாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்து. எனினும் பிரதமரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து கொழும்பில் கலவரம் வெடித்திருந்தது. இதன் பின்னர், கொழும்பிலும், பின்னர் மேல் மாகாணத்திலும் ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

இந்நிலையிலேயே சற்று முன்னர் இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

முன்னதாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மேல் மாகாணம் முழுவதும் இந்த ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்னர் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காலி முகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை அரசாங்க ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர்.

இந்தநிலையில், போராட்டக்காரர்களின் பகுதிக்குச் சென்ற மகிந்த ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்க முயற்சித்தனர். இதன்போது 17 பேர் காயமடைந்தனர்.

இதற்கிடையில், கலவரம் ஏற்பட்ட காலி முகத்திடலுக்கு சென்ற எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அங்கிருந்த எதிர்ப்பாளர்களால் விரட்டியடிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே சற்று முன்னர் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

related posts