Home இலங்கை வன்முறைகள் நெருக்கடியை தீர்க்காது – கோட்டாய ராஜபக்ச

வன்முறைகள் நெருக்கடியை தீர்க்காது – கோட்டாய ராஜபக்ச

by Jey

கொழும்பு அலரி மாளிகை மற்றும் காலிமுகத் திடலில் கோட்ட கோ கம பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

அரசியல் பக்கசார்பின்மையை பொருட்படுத்தாமல் தூண்டி விடப்படும் மற்றும் பங்கேற்பவர்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறைகளை வன்மையாக கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வன்முறைகள் தற்போதைய நெருக்கடியை தீர்க்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து பிரஜைகளும் அமைதியாகவும் பொறுமையுடனும் செயற்படுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் இந்த நெருக்கடிக்கு தீர்வுகாண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

related posts