பிரிட்டன் பாராளுமன்ற கூட்டத்தொடர் ராணி இரண்டாம் எலிசபெத் இல்லாமல் கூடியது. அவருக்கு பதிலாக இளவரசர் சார்லஸ் உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.
பிரிட்டன் பாராளுமன்றம் கூட்டம் இன்று துவங்கியது. ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்ற கூட்டத்தொடர் துவங்கும் போது, ராணி இரண்டாம் எலிசபெத், அணிவகுப்பு மரியாதையுடன் வந்து பாராளுமன்ற அரியணையி்ல் அமர்ந்து அரசின் ஆண்டறிக்கையினை வாசிப்பது மரபு.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ராணி எலிசபெத் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இந்தாண்டு அவர் இல்லாமல் பாராளுமன்றம் கூட்டம் கூடியது. எலிசபெத் ராணியின் மகன் இளவரசர் சார்லஸ் பிரிட்டன் நாடாளுமன்ற உரையை நிகழ்த்தினார்.
இதன் மூலம் பிரிட்டன் வராலாற்றில் 60 வருடங்களில் முதல் முறையாக தொடக்க விழா உரையை இங்கிலாந்து ராணி எலிசபெத் நிகழ்த்தவில்லை.
அவருக்கு பதிலாக இளவரசர் சார்லஸ் ராணியின் உரையை வாசித்து, ஒவ்வொரு மசோதாவையும், ராணியின் இந்த அரசு மேற்கொள்ளும் என கூறினார்.