ஆப்கானிஸ்தான் பிரஜைகளுக்கு புகலிடம் வழங்குவதில் கால தாமதம் நிலவி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய போது 40000 ஆப்கான் பிரஜைகளுக்கு புகலிடம் வழங்குவதாக கனடா உறுதிமொழி வழங்கியிருந்த்து.
ஆப்கானிஸ்தானில் கடமையாற்றிய கனேடிப் படையினருக்கு உதவிய மொழிப்பெயர்கள் உள்ளிட்ட 18000 பேரை கனடாவில் மீள்குடியேற்றுவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும் சொற்ப எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே கனடாவில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
சுமார் 10500 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், 6230 பேர் மட்டுமே கனடாவை வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்கத்கது.