Home இந்தியா மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் – மு.க.ஸ்டாலின்

மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் – மு.க.ஸ்டாலின்

by Jey

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் – வேளச்சேரி இடையே நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் ரூ. 95.21 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாம்பரம் – வேளச்சேரி இடையே மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். அதன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் மேம்பாலத்தில் காரில் பயணம் செய்தார்.

2.03 கி.மீ நீளமும் 11 மீ அகலமும் கொண்ட மேடவாக்கம் மேம்பாலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தற்போதைய பாலங்களில் மிக நீளமான மேம்பாலம் என கூறப்படுகிறது.

related posts