Home உலகம் வட கொரியாவில் கொரோனா தொற்று அந்நாட்டுக்கு பெரும் பேரழிவாகும்- கிம் ஜாங் உன்

வட கொரியாவில் கொரோனா தொற்று அந்நாட்டுக்கு பெரும் பேரழிவாகும்- கிம் ஜாங் உன்

by Jey

உலகம் முழுவதையும் கொரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரம் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வட கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று அந்நாட்டுக்கு பெரும் பேரழிவாகும் என்று அதன் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். ஒன்று கூட்டிய அவசர கூட்டத்தில் பகொரோனா வைரஸ் தோற்றுக்கு எதிராக ஒரு முழுமையான போருக்கு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

 

இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்று கூறப்படுகிறது.

சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியானதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனால் கொரோனா காரணமாகத்தான் இவர்கள் உயிரிழந்தார்களா? என்ற தகவலை வடகொரியா தெரிவிக்கவில்லை. அனைத்து மரணங்களையும் காய்ச்சல் மரணங்கள் எனப் பதிவு செய்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மருத்துவப் பரிசோதனைகளை வடகொரியா தீவிரப்படுத்தியுள்ளது. வடகொரியாவில் கண்டறியப்பட்டுள்ளது ஓமிக்ரான் வைரஸ் என்றும் சீனா வழியாகவே வைரஸ் பரவியுள்ளது என்றும் சர்வதேச விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி திட்டம் மற்றும் மோசமான சுகாதார அமைப்களால் அதன் 2.5 கோடி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

related posts