மொன்றியலில் ஆங்கில மொழி பேசும் சமூகத்தினர் போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில் பிரெஞ்சு மொழி திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆங்கில மொழி பேசும் சமூகத்தினரால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பில்96 என்னும் இந்த திருத்தச் சட்டம் தங்களது ஆங்கிலமொழி உரிமைகளை ஒடுக்கும் வகையிலானது என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பிரெஞ்சு மொழியை மதிப்பதாகவும் ஆதரிப்பதாகவும்ம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பிரெஞ்சு மொழியை மேம்படுத்துவதற்காக ஆங்கில மொழி பேசும் சமூகத்திற்கு அநீதி இழைக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.