உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தநிலையில் ரஷியஅதிபர் விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளாா் எனவும் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், ‘புதின் என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளாா் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவர் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்’ என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், ரஷியஅதிபர் புதினுக்கு ஏற்பட்ட நோய் குறித்து அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவா் மற்றொரு தொழிலதிபருடன் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில் புதினுக்கு ரத்தப் புற்றுநோய் உள்ளது. அதனால் அவாின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். அவா் வெறிபிடித்தவா் போல் நடந்து கொண்டதாக ஆடியோவில் ரஷிய தொழிலதிபா் கூறியுள்ளாா்.
இந்த ஆடியோவை ரஷிய தொழிலதிபருக்கு தொியாமல் அவா் பதிவு செய்துள்ளாா். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் லைன்ஸ்’ என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.