அல்பர்ட்டா மாகாண முதல்ர் ஜேசன் கென்னி அமெரிக்காவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார்.
இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு கென்னி, வொஷிங்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எரிசக்தி தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
கனடாவிலிருந்து எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் முனைப்புக்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சக்தி வளம் மற்றும் இயற்கை வளங்கள் குறித்த அமெரிக்க செனட் சபையின் உறுப்பினர்களை கென்னி சந்திக்க உள்ளார்.