Home விளையாட்டு ஐ.பி.எல் கிரிக்கெட் ஐதராபாத் – மும்பையுடன் இன்று மோதல்

ஐ.பி.எல் கிரிக்கெட் ஐதராபாத் – மும்பையுடன் இன்று மோதல்

by Jey

முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 7 த􀂄ோல்வியுடன் 10 புள்ளிகள் பெ ற்று 8-வது இடத்தில் உள்ளது. முதல் 2 லீக் ஆட்டங்களில் உதை வாங்கிய அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் வெற்றியை ருசித்தது. ஆனால் கடைசி 5 ஆட்டங்களில் (குஜராத், சென்னை , டெ ல்லி, பெ ங்களூரு, கொல்கத்தா அணிகளிடம்) அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து தடுமாறி வருகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஆட்டம் ஐதராபாத் அணிக்கு வாழ்வா -சாவா? போராட்டமாகும். இதில் தோற்றால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப் பு முடிந்து போகும். ஐதராபாத் அணியில் பே ட்டிங்கில் அபிஷே க் ஷர்மா (374 ரன்கள்), மார்க்ராம், ராகுல் திரிபாதி, நிகோலஸ் பூரன், கேப் டன் வில்லியம்சனும், பந்து வீச்சில் நடராஜன், உம்ராக் மாலிக், புவனேஷ்வர்குமார், மார்கோஜேன்சனும் வலுசேர்க்கிறார்கள்.

5 முறை சாம்பியனான மும் பை இந்தியன்ஸ் 12 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 9 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி தனது முதல் 8 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக சறுக்கலை சந்தித்தது. கடைசியாக நடந்த4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றது.

முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் 97 ரன்னில் சென்னையை சுருட்டிய மும்பை அணி 14.5 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது. இனிமேல் இழக்க எதுவும் இல்லை என்பதால் அந்த அணி நெருக்கடியின்றி தடாலடியாக ஆடும்.

மும்பை அணியில் பே ட்டிங்கில் திலக்வர்மா (368 ரன்கள்), இஷான் கிஷன், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ரோகித் சர்மாவிடம் இருந்து நீண்ட இன்னிங்சை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா , டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், மெரிடித் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 40 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். அவர்கள் கச்சிதமாக பந்து வீச வேண்டியது அவசியமானதாகும். அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டியது. கட்டாயம் என்பதால் ஐதராபாத் அணி தீவிரமாக வரிந்து கட்டும். அதேநேரத்தில் மும்பை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க முனைப்புகாட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

related posts