கனடாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து மக்கள் தங்களது கரிசனையை வெளியிட்டு வருகின்றனர்.
றொரன்டோ பெரும்பாக பகுதியில் எரிவாயு ஒரு லீற்றரின் சராசரி விலை 2.09 டொலர்களாக காணப்படுகின்றது.
மரக்கறி வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள், பழங்கள் என்பனவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.
இறைச்சி வகைகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பதிவாகி வரும் நிலையில் ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.