அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கான கட்டுமானப் பணிகள் திட்டமிட்ட வேகத்தில் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது நடந்து வரும் பணிகள் குறித்து, ராமர் கோவில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கோவிலுக்கான அடிபீடம் அமைக்கும் பணி, இந்தாண்டு பிப்.,ல் துவங்கியது. ஏற்கனவே திட்டமிட்டபடி, வரும், ஆக.,க் குள் இது முடிக்கப்படும். இந்தப் பணி முடிந்ததும், மூன்றடுக்கு கோவிலுக்கான பணிகள் துவங்கும். இதற்கு தேவையான கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே திட்டமிட்டபடி, 2023 டிச.,க்குள் கோவில் கட்டி முடிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.