கனடாவிலிருந்து கனோலா விதை ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியுள்ளது.
சீனாவின் Huawei நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மென் வன்சூவை கனடா கைது செய்ததனைத் தொடர்ந்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டது.
இந்த தடை கடந்த மூன்று ஆண்டுகளாக அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனா அரசாங்கத்தின் இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக கனேடிய வர்த்தக அமைச்சர் Mary Ng அறிவித்துள்ளார்.