சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புயலால் பாதிக்கப்பட்டு 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்தன.
அந்த விசைப்படகுகளை கடலிலிருந்து வெளியே எடுத்த உரிமையாளர்கள், உதிரி பாகங்களை அகற்றிய பிறகு கழிவுகளை காசிமேடு பழைய யார்டு பகுதியில் கொட்டி வைத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று காலை திடீரென விசைப்படகுகளின் கழிவுகள் தீப்பிடித்து எரிந்தது.
காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி, விண்ணை நோக்கி கரும்புகை மூட்டம் எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை, துறைமுகம் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரம் போராடி விசைப்படகு கழிவுகளில் எரிந்த தீயை அணைத்தனர்.
சம்பவ இடத்தில் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. எபினேசர், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் ஆய்வு ெசய்து, அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டனர்.