கனடாவில் குரங்கு அம்மை நோயாளிகள் இரண்டு பேர் முதல் தடவையாக பதிவாகியுள்ளனர்.
கனடாவின் பொதுச் சுகாதார முகவர் நிறுவனம் குரங்கு அம்மை நோயாளிக்ள தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நோய் தடுப்பு குறித்து அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
அண்மையில் அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயாளிகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கியூபெக்கில் நோய்த் தொற்று பதிவானவர்களுக்கு எவ்வாறு நோய்த் தொற்று பரவியது என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று பரவுகை தொடர்பில் மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என மொன்ட்ரயல் பொதுச் சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.