உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீடிக்கக்கூடிய உணவுப்பொருள் நெருக்கடி ஏற்படும் என்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
இந்த போரினால் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல் எண்ணெய், மாவுப்பொருட்கள் ஏற்றுமதி பெரும்பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில், போர் நேற்று 86-வது நாளை எட்டியது. மரியுபோல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அஜோவ் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷொய்கு தெரிவித்துள்ளார்.
இந்த நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது. கிழக்கு உக்ரைனில் உக்கிர தாக்குதல் தலைநகர் கீவை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெறாத நிலையில், ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. தொடர்ந்து ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.