Home உலகம் பிரதமா் மோடியை என்.இ.சி தலைவா் நொபுஹிரோ எண்டோவ் சந்திப்பு

பிரதமா் மோடியை என்.இ.சி தலைவா் நொபுஹிரோ எண்டோவ் சந்திப்பு

by Jey

டோக்கியோ, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்கிற குவாட் 2வது உச்சி மாநாடு, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்குகிறது.

இந்த மாநாடு, இந்தோ-பசிபிக் பிராந்திய விஷயங்கள், பரஸ்பர ஆர்வம் உள்ள உலகளாவிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்வதற்கு வாய்ப்பினை வழங்குகிறது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடியை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அழைத்துள்ளார்.

பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் ஆகியோரும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில், பிரதமா் மோடியை என்.இ.சி தலைவா் நொபுஹிரோ எண்டோவ் சந்தித்தாா். இந்த சந்திப்பு குறித்து அவா் கூறுகையில், திறமைகளை உருவாக்கவும், மேம்படுத்தவும் வலுவான நோக்கங்களை பிரதமா் மோடி கொண்டுள்ளாா். இந்தியாவின் தொலைதொடா்பு துறையில் என்.இ.சி ன் பங்கை பிரதமா் மோடி பாராட்டினாா்.

என்.இ.சி நிறுவனம் சென்னை, அந்தமான் நிக்கோபாா் தீவுகள், மற்றும் கொச்சி – லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். தொழில்துறை மேம்பாடு, வாிவிதிப்பு மற்றும் தொழிலாளா் துறைகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தம் குறித்து இருவரும் விவாதித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியாவில் உள்ள வாய்ப்பு குறித்து அவா்கள் விவாதித்தாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்மார்ட் சிட்டிகளுக்கு என்.இ.சியின் பங்களிப்பு குறித்து பேசினோம். தற்போதைய அரசானது கல்வி மற்றும் பிற துறைகளில் பல்வேறு திட்டங்களை வைத்திருக்கிறது என்று பிரதமரை சந்தித்த பிறகு எண்டோ கூறினார்.

related posts