கனடாவில் இடம்பெற்ற புயல் சீற்றம் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கடுமையான புயல் காற்று தாக்கத்தினால் பல்லாயிரக் கணக்கானவர்கள் இன்னமும் மீன்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணத்தினையே இந்த புயல் மோசமாக தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புயல் சீற்றத்தினால் சேதமடைந்த மின்சார இணைப்புக்களை வழமைக்கு கொண்டு வர சில தினங்கள் தேவைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.