கனடாவில் சுமார் 150,000 குடும்பங்கள் தொடர்ந்தும் இருளில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் காற்று காரணமாக இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
புயல் தாக்குதலின் காரணமாக டர்ஹம் பகுதியில் எட்டு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
றொரன்டோவிலும் ஒரு பாடசாலை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புயல் காற்று காரணமாக சுமார் 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.