இலங்கையின் கடன்களை மீள்திருத்தம் செய்து கொள்வதற்காக நிதி மற்றும் சட்ட ஆலோசகர் நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதன்படி லசாட் (Lazard)மற்றும் கிளிப்போட் (Clifford)ஆகிய நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மீள்திருத்த பேச்சுவார்த்தைகள், 6 முதல் 7 மாதங்களுக்குள் நிறைவுசெய்யப்படுமானால், அடுத்த 12 மாதங்களுக்குள் இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமாகும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.