Home இந்தியா அஞ்சல் டிபாசிட் பணம் ரூ.1 கோடியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல்

அஞ்சல் டிபாசிட் பணம் ரூ.1 கோடியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல்

by Jey

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பைனா கிராமத்தில் உள்ள துணை அஞ்சலக அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்த விஷால் அஹிர்வார்,

கடந்த 20-ம் திகதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில், அப்பகுதியில் 24 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அஞ்சல் டிபாசிட் பணம் ரூ.1 கோடியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்துள்ளதும், அந்த பணத்தை ஐ.பி.எல்., சூதாட்டத்தில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

related posts