Home இலங்கை இலங்கையில் எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம்

இலங்கையில் எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம்

by Jey

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும், ஒரு வாரத்திற்குப் போதுமான பொருட்களை வாங்குவதற்குக் கூட வருமானம் இல்லை என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் எப்போது மீண்டு வரும் என்று கூற முடியாது. நாட்டில் தற்போது உள்ள வெளிநாட்டு கையிருப்பு ஒரு வாரத்திற்கு போதுமானதாக இல்லை. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மாத்திரமே இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பலர் வேலை இழக்கும் அபாயம்! இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் கைவிரித்த மத்திய வங்கியின் ஆளுநர்

related posts