மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பைனா கிராமத்தில் உள்ள துணை அஞ்சலக அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்த விஷால் அஹிர்வார்,
கடந்த 20-ம் திகதி போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில், அப்பகுதியில் 24 குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் அஞ்சல் டிபாசிட் பணம் ரூ.1 கோடியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்துள்ளதும், அந்த பணத்தை ஐ.பி.எல்., சூதாட்டத்தில் பயன்படுத்தியதும் தெரியவந்தது. அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.