பிரேசிலில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றின் கழிவறைக்குள் பூமா எனப்படும் மலைச்சிங்கம் ஒன்று திடீரென புகுந்தது. அப்போது அங்கிருந்த மாணவர்களை நோக்கி மலைச்சிங்கம் கர்ஜித்தது.
இதைக்கண்ட மாணவர்கள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். உடனடியாக இது குறித்த தகவல் தீயணைப்புத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைவாக வந்த தீயணைப்புத் துறையினர் மலைச்சிங்கத்தை அங்கிருந்து பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர். பள்ளி கழிவறைக்குள் மலைச்சிங்கம் புகுந்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.