Home உலகம் தலீபான் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு

தலீபான் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு

by Jey

ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பெண்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது, தங்கள் முகம் உட்பட முழு உடலை மறைக்கும் வகையிலான பாரம்பரிய பர்தா உடையை அணிய வேண்டும் என்று ஆப்கன் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்களில் பணி புரியும் பெண் செய்தி வாசிப்பாளர்கள்

மற்றும் தொகுப்பாளர்கள் இனி பர்தாவால் மூடப்பட்ட முகத்துடன் திரையில் வர வேண்டும் என தலிபான் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஏற்று தற்போது ஆப்கானிஸ்தான் செய்தி சேனல்களில், திரையில் தோன்றும் பெண்கள் முகங்களை மூடிக்கொண்டே செய்தி வாசிப்பிலும், தொகுத்து வழங்குவதிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு ஒரு சில பெண் செய்தி வாசிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில், பெண் செய்திவாசிப்பாளர்கள் முகத்தை மறைத்து செய்தி வாசிக்கவேண்டும் என்ற அரசின் உத்தரவிற்கு ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாலின பேதமின்றி ஆண் செய்தி வாசிப்பாளர்களும் கருப்பு முகக்கவசம் அணிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

related posts