Home விளையாட்டு இறுதி கட்டத்துக்கு வந்து விட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி

இறுதி கட்டத்துக்கு வந்து விட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி

by Jey

கிரிக்கெட் தொடர் 15-வது ஐ.பி.எல். இறுதி கட்டத்துக்கு வந்து விட்டது. இன்னும் 2 ஆட்டங்களில் புதிய சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதிசுற்றை எட்டி விட்டது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) மோதுகின்றன.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது தகுதி சுற்றில் குஜராத்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனாலும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்திற்குள் வந்ததால் இன்னொரு வாய்ப்பு கிட்டியுள்ளது.

2008-ம் ஆண்டு அறிமுக ஐ.பி.எல். கோப்பையை ராஜஸ்தான் கைப்பற்றியது. அதன் பிறகு அந்த அணி இறுதி சுற்றை கூட எட்டியதில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளது.

 

related posts