மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் உள்ள வாடகை குடியிருப்பு ஒன்றில் கடந்த 4 மாதங்களாக வசித்து வந்தவர் பிதிஷா டி மஜும்தார் (வயது 21). பிரபல மாடலான இவர் வங்காள மொழி படத்திலும் நடித்து உள்ளார்
இந்நிலையில், பிதிஷா தனது குடியிருப்பில் கடந்த 25ந்திகதி மாலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து அவரது குடியிருப்புக்கு வந்த பேரக்பூர் நகர போலீசார் குடியிருப்பின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
தூக்கில் தொங்கிய பிதிஷாவின் உடலை கைப்பற்றி ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த குடியிருப்பில் தற்கொலை குறிப்பு ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். பிதிஷாவுக்கு அனுபாப் பேஹ்ரா என்ற காதலர் உள்ளார்.
அவருக்கு பிதிஷா தவிர்த்து 3 தோழிகள் இருந்துள்ளனர். பேஹ்ராவுடனான நட்புறவால் பிதிஷா மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என பிதிஷாவின் தோழிகள் கூறியுள்ளனர்.