Home உலகம் குரங்கு காய்ச்சல் சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம்

குரங்கு காய்ச்சல் சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம்

by Jey

அமெரிக்கா இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின், ‘உலக தொற்று அபாய தயார்நிலை’ குழுவின் இயக்குனர் சில்வி பிரையன்ட் நேற்று கூறியதாவது:- ”மக்கள் கவலைப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல. ஆனால், மெதுவாக இது சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு விரைவான நடவடிக்கை தேவை. தடுப்பூசியும், முறையான சிகிச்சையும் இதற்கு ஒரே தீர்வு. பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, தனிமைப்படுத்துவதே, இதன் பரவலை தடுப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாகும். எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

 

related posts