Home உலகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி

ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி

by Jey

சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காயில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தது சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காயில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தது.

2.5 கோடி மக்கள் வசிக்கிற இந்த நகரில் நீண்ட காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பது மக்களை எரிச்சல்படுத்துகிறது. விரக்தியில் ஆழ்த்தியும் உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள மக்களில் சிலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தங்கள் வளாகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் இறங்கினர்.

அடுத்த நாள் காலையில் அவர்கள் சுதந்திரமாக தெருக்களில் நடமாடினர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பல வளாகங்களில் இதே போன்ற நிகழ்வுகள் நடக்கிறதாம். தற்போது அந்த நகரின் 2 கோடியே 10 லட்சம் மக்கள் முன் எச்சரிக்கை மண்டலம் என வரையறுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் சில மணி நேரம் வெளியே செல்லலாம். ஆனால் அதற்கு பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கிடையே ஷாங்காய் நகரில் அடுத்த மாதம் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

related posts