நைஜீரியாவில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர்.
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில், நேற்று காலை அறக்கட்டளை ஒன்றின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
உணவு வாங்க பலர் கூடியிருந்தனர்.உணவு வழங்க துவங்கியவுடன், கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 31 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.