பிரேசிலில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அச்சம் நிலவி வருகிறது
வடகிழக்கு பிரேசிலில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. வெள்ளம் குடியிப்பு பகுதிகளை சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
வெள்ளம் காரணமாக அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்நிலையில், வடகிழக்கு பிரேசிலில் பெய்து வரும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.