புயல் தாக்கத்தினால் மின்சாரமின்றி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களை மிக மோசமாக தாக்கிய புயல் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.
புயல் தாக்கி ஒரு வாரத்திற்கு மேல் கடந்துள்ள நிலைலயிலும் இன்னும் சுமார் 50000 வீடுகளுக்கு மின்சார விநியோகம் கிடையாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
புயலின் தாக்கம் எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் தீவிரம் என்பதனால் சேதமடைந்த மின்சார இணைப்புக்களை வழங்குவதில் பெரும் நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.