Home உலகம் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தல்

பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தல்

by Jey

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான்(டிடிபி) இயக்கத்தால் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு தொடர் அச்சுறுத்தல் இருந்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயங்கரமான பயங்கரவாதக் குழுவுடன் நடந்துகொண்டிருக்கும் சமாதான முன்னெடுப்புகள் பயனளிக்காது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பேற்றபின், டிடிபி இயக்கம் பற்றி வெளியாகியுள்ள முதல் அறிக்கை இதுவாகும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின், 1988 தலிபான் தடை கமிட்டியின் கீழ் உள்ள ஒரு கண்காணிப்பு குழுவின் ஆண்டு அறிக்கையின்படி, இந்த பயங்கரவாத இயக்கம் முந்தைய ஆப்கானிஸ்தான் ஆட்சியாளராக இருந்த கானி பதவியைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட பின் அடைந்த பயன்களையும், தற்போதைய ஆப்கானிஸ்தான் தலிபான்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதையும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

related posts