Home இந்தியா உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம்

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம்

by Jey

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வந்தது. அது சமீப காலமாக தீவிரம் அடைந்துள்ளது.

எம்எல்ஏ -க்கள் மற்றும் அமைச்சர்கள் சிலர் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம் நேரில் கோரிக்கை விடுத்ததாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினரும், மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக வேண்டும் என்று ஒருமனதாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

related posts