Home உலகம் சீனாவின் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கை

சீனாவின் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கை

by Jey

சீனாவில் தற்போதுள்ள மக்கள் தொகை, 2100ல், பாதிக்கு மேல் குறையும் என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலையின் கொள்கை கல்வி மையம், சீனாவின் மக்கள் தொகை குறித்த ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:பத்தாண்டுகளுக்கு முன் சீனாவின் மக்கள் தொகை, ஆண்டுக்கு, 80 லட்சம் என்ற அளவில் அதிகரித்தது.

இதையடுத்து, சீனாவில் கல்வி, வீடு, உணவு உள்ளிட்டவற்றுக்கான வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் குழந்தை பெற்றுக் கொள்வது குறைந்தது. உடனே சீன அரசு, 2016ல் மூன்று குழந்தைகளின் பெற்றோருக்கு வரி விலக்கு உட்பட பல்வேறு சலுகைகளை அறிவித்தது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் தொகை உயரவில்லை.

சீன மக்கள் தொகை, 2021ல்,4.௮௦ லட்சம் உயர்ந்து, 141 கோடியே, 21 லட்சம் என்ற அளவிற்குத் தான் அதிகரித்துள்ளது. கடந்த, 1959 – 61ல் சீனாவின் மக்கள் தொகை, 66 கோடியாக இருந்தது. அப்போது ஏற்பட்ட கடும் பஞ்சத்திற்குப் பின், முதன் முறையாக, 2021ல் தான் மக்கள் தொகை வளர்ச்சி பெருமளவு குறைந்துள்ளது.சீனப் பெண்களின் கருத்தரிப்பு விகிதமும் சரிவடைந்துள்ளது. கடந்த, 1980களில் ஒரு பெண்ணின் சராசரி பிரசவ விகிதம், 2.6 ஆக இருந்தது.

இது, 2021ல், 1.15 சதவீதமாக குறைந்துள்ளது. எதிர்கால தேவைகளை கருதி சீனப் பெண்கள் திருமணம் செய்வதை தள்ளிப் போடுகின்றனர். இதனாலும் மக்கள் தொகை குறைந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் சீனாவின் மக்கள் தொகை, 2100ல், தற்போதுள்ளதை விட, பாதியாக குறைந்து, 58.௭௦ கோடியாக சரிவடையும். அடுத்த, 10 ஆண்டுகளில் மக்கள் தொகையில், இந்தியா சீனாவை விஞ்சி முதலிடத்தை பிடிக்கும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts