ஒன்றாரியோ மாகாண கட்சித் தலைவர்கள் இறுதிக் கட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளைய தினம் மாகாணத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்றைய தினம் முழு நாளும் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதான கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கு சென்று பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.