Home இந்தியா ஒரு சிலிண்டர் ரூ.2,373 ஆக விற்பனை

ஒரு சிலிண்டர் ரூ.2,373 ஆக விற்பனை

by Jey

வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஒரு சிலிண்டர் ரூ.2,373 ஆக விற்பனை ஆகிறது.

வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் நிர்ணயம் செய்து வந்தன.

இந்நிலையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.2,373 ஆகவும், டில்லியில் ரூ.2,219 ஆகவும், கோல்கட்டாவில் ரூ.2,322 ஆகவும், மும்பையில் ரூ.2171.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

related posts