Home இந்தியா என்ன… லஞ்சம், ஊழலுக்கு பயிற்சிப் பாசறையா?

என்ன… லஞ்சம், ஊழலுக்கு பயிற்சிப் பாசறையா?

by Jey

திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு, ‘கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது’ வழங்கும் திட்டத்தில், விருதாளர்களை தேர்வு செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனக்கு, ‘கலைமாமணி’ விருது கொடுத்த கருணாநிதி பெயரால் வழங்கப்படும் விருதை பெறும் கலைஞர்கள் மனம் மகிழ்வர். விருதை பெறுவோரை தேர்வு செய்யும் குழுவில் ஒருவனாக, என்னை நியமித்ததற்கு நன்றி.

உங்க நன்றிக்கடனை இத்தோடு நிறுத்திக்குங்க… விருதாளர்களை தேர்வு செய்றப்ப, தி.மு.க.,வுல இருக்கிற நடிகர்களையா பார்த்து, தேர்வு பண்ணிடாதீங்க!

தமிழக காங்கிரஸ் விவசாய அணி மாநில செயலர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: குஷ்புவை போல, நக்மாவும் வேறு கட்சிக்கு செல்வதென்றால் தாராளமாக செல்லலாம். கதர் ஆடை உடுத்தி, கட்சியை வளர்க்கும் தொண்டர்களை கொண்ட கட்சி இது.

உங்களை போல் பவுடர் பூசி அலைபவர்களுக்கு காங்கிரஸ் கட்சியை பற்றி, எந்த அரிச்சுவடியும் தெரியாது. நக்மா வேறு கட்சிக்கு தாவ தயாராகி விட்டதால், உடனடியாக அவரது கட்சி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

காங்கிரஸ் பத்தி எந்த அரிச்சுவடியும் தெரியாதவங்களை, முதல்ல ஏன் கட்சியில சேர்த்தீங்க என்பதற்கான காரணத்தை சொல்லுங்களேன்!

தஞ்சை மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் சந்திரசேகர் பேச்சு: ‘சேப்பாக்கம் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., உதயநிதியை அமைச்சராக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

அப்பா… ஒருத்தர் ஆரம்பிச்சி வச்சுட்டாரு… அடுத்து, தமிழகம் முழுக்க இருந்தும் அலை அலையா தீர்மானங்கள் போடுவாங்க பாருங்க!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: 60 கி.மீ.,-க்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதிப்படி, தமிழகத்தில், 32 சாவடிகள் மூடப்பட வேண்டும். ஆனால், 97.67 சதவீத சாலைகள் சுங்கச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. தேசிய அளவில், 19.64 சதவீத சாலைகள் மட்டுமே சுங்கச் சாலைகளாக உள்ளன. இந்த அநீதியை களைய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாஸ்தவம் தான்… நம்ம ஊர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தான், இதில் கவனம் செலுத்த வேண்டும்… ஆனால் அவரோ, எந்தெந்த சாலை சந்திப்புல எல்லாம், கருணாநிதிக்கு சிலை வைக்கலாம்னு தீவிரமா யோசனை பண்ணிட்டு இருக்காரே!

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை கூட்டங்கள் நடத்த வேண்டும்’ என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்ன… லஞ்சம், ஊழலுக்கு பயிற்சிப் பாசறையா?

 

 

related posts