கனடாவில் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு மாத கால இடைவெளியில் இரண்டாவது தடவையாக வட்டி வீதங்களை கனேடிய மத்திய வங்கி அதிகரித்துள்ளது.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறு வட்டி வீதங்களை அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இம்முறை வட்டி வீதம் 0.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஸ்ய – உக்ரைன் போர், சீனாவில் கோவிட் முடக்க நிலை மற்றும் விநியோகச் சங்கிலியில் நிலவி வரும் தாமதங்கள் என்பனவற்றினால் உணவு மற்றும் எரிசக்தி என்பனவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன.