ரயில்வே கட்டமைப்பு பணிகள் நடக்க உள்ளதால், சில விரைவு ரயில்களின் சேவையில் நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொன்மலை – திருவெறும்பூர் இடையே நாளை சுரங்கப்பாதைக்கான பணிகள் நாளை நடக்கவுள்ளது. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன
மயிலாடுதுறை – திருச்சி இடையே நாளை காலை 8:15 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருச்சி – மயிலாடுதுறை இடையே நாளை நண்பகல் 12:50 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், தஞ்சாவூரில் இருந்து மதியம் 1:40 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல், பாலக்காடு ரயில் நிலையம் அருகே ரயில்பாதையில் மின்மயமாக்கல் பணி நடக்க உள்ளதால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி – பாலக்காடு டவுன் இடையே மதியம் 1:00 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், இன்று முதல் வரும் 30ம் திகதி வரை, பாலக்காடு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்
பாலக்காடு டவுன் – திருச்சி இடையே காலை 6:30 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில், இன்று முதல் வரும் 30ம் திகதி வரை, பாலக்காடு ரயில் நிலையத்தில் இருந்து காலை 6:45 மணிக்கு இயக்கப்படும்.