ஒன்றாரியோ ஏரியில் இடம்பெற்ற படகு விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படகில் பத்து பேர் பயணம் செய்துள்ளதுடன் அதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 8 பேரை பாதுகாப்பாக மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
படகு கவிழ்ந்து பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திடீர் விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
34 வயதான ஆண் ஒருவரும், 25 வயதான பெண் ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.