காஷ்மீரில் அண்மையில் அரசு ஊழியரான ராகுல் பட் எனும் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில், அம்ரீன் பட் எனும் நடிகை ஒருவர், அவரது வீட்டுக்கு வெளியே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வடு மறைவதிற்குள் நேற்று முன் தினம் அரசுப் பள்ளியில் ரஜினி பாலா எனும் ஆசிரியை பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இரையானார். இந்த நிலையில், காஷ்மீரில் வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு இருக்கிறார்.
இந்தச் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய்குமார் என்று தெரியவந்திருக்கிறது. இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலிருக்கும் எல்லாக்கி தெஹாதி வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பயங்கரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த விஜய்குமார், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில், “ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விஜய் குமார் என்பவர் காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். காஷ்மீர் மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதிகளால் நம் மக்கள் கொல்லப்படுவதை பொறுத்துக் கொள்ளமுடியாது என பதிவிட்டுள்ளார்.
அரசு ஊழியரான ராகுல் பட் எனும் பண்டிட் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில், அம்ரீன் பட் எனும் நடிகை ஒருவர், அவரது வீட்டுக்கு வெளியே பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வடு மறைவதிற்குள் நேற்று முன் தினம் அரசுப் பள்ளியில் ரஜினி பாலா எனும் ஆசிரியை பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இரையானார். இந்த நிலையில், காஷ்மீரில் வங்கி ஊழியராகப் பணியாற்றி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு இருக்கிறார். இந்தச் சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விஜய்குமார் என்று தெரியவந்திருக்கிறது. இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டத்திலிருக்கும் எல்லாக்கி தெஹாதி வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பயங்கரவாதிகள் எதிர்பாராத நேரத்தில் வங்கிக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.