தேர்தல் தோல்வி காரணமாக இரண்டு கட்சித் தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த மாகாண சட்டசபைத் தேர்தலில் டக் போர்ட் தலைமையிலான முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி 83 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
தேர்தலில் அடைந்த தோல்வி காரணமாக என்.டி.பி கட்சியின் தலைவி அன்ட்ரியா ஹோர்வாத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது தொகுதியில் வெற்றியீட்டிய போதிலும் தேர்தலில் கட்சி தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதேவேளை, ஒன்றாரியோ லிபரல் கட்சியின் தலைவர் ஸ்டீவன் டெல் டுக்கா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
டெல் டுக்கா, தான் போட்டியிட்ட தேர்தல் தொகுதியிலும் தோல்வியைத் தழுவியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.