அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் ஸ்பெல் பீ (Spell Bee) என்ற ஆங்கில உச்சரிப்புப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
2022 ஆம் ஆண்டிற்கான ஸ்கிரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ பட்டத்தை ஹரிணி லோகன் வென்றுள்ளார். பல வருடங்களாக அமெரிக்காவில் ஆங்கில உச்சரிப்புப் போட்டியான ஸ்பெல் பீ நடந்து வருகிறது.
பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில் நடுவர்கள் குழு அளிக்கும் ஆங்கில வாக்கியத்தின் சரியான உச்சரிப்பை (ஸ்பெல்லிங்) மாணவர்கள் சொல்ல வேண்டும். பல கட்டங்களுக்கு பிறகு இறுதி சுற்றில் இன்று 2 மாணவர்கள் போட்டியிட்டார்கள்.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி மாணவி ஹரிணி லோகன் (8 ஆம் வகுப்பு), இந்திய வம்சாவளி மாணவன் விக்ரம் ராஜு ஆகியோர் இறுதி போட்டியில் பங்கேற்றனர்.
இறுதி போட்டி மிகவும் பரபரப்பாக சென்றது. இறுதியில் ஒரு நீண்ட வாக்கியத்தின் உச்சரிப்பில் ஹரிணி லோகன் 21 வார்த்தைகளை சரியாக கூறி பட்டத்தை தட்டி சென்றார். விக்ரம் ராஜு 15 வார்த்தைகளை மட்டுமேகூறி 2-வது இடத்தை பிடித்தார்.
வெற்றி பெற்ற ஹரிணி லோகனுக்கு பட்டத்துடன் இந்திய மதிப்பில் சுமார் 38 லட்சத்து 80 ஆயிரம் (50 ஆயிரம் அமெரிக்க டாலர்) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.