ஒன்றாரியோ மாகாணத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது.
இம்முறை நடைபெற்ற தேர்தலில் வரலாறு காணாத அளவிற்கு குறைவான எண்ணிக்கையில் வாக்களிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியை ஈட்டியுள்ளது.
எனினும், வாக்களிக்க தகுதி பெற்றுக்கொண்டவர்களில் 43.5 வீதமானவர்களே வாக்களித்துள்ளனர்.
10.7 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதியுடைவர்கள் என்ற போதிலும் 4.6 மில்லியன் வாக்காளர்களே வாக்களித்துள்ளனர்.
இது 2018ம் ஆண்டை விடவும் 18 வீத வீழ்ச்சியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.